Paristamil Navigation Paristamil advert login

 Nato நாடுகளை  கடுமையாக எச்சரிக்கும்  ரஷ்யா

 Nato நாடுகளை  கடுமையாக எச்சரிக்கும்  ரஷ்யா

25 சித்திரை 2024 வியாழன் 15:24 | பார்வைகள் : 1544


ரஸ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைனை ஆதரிக்கும் நாடுகளை ரஸ்யா எச்சரித்து வருகின்றது.

இந்நிலையில் போலந்து எல்லையில் அமெரிக்கா ஆயுதங்களை குவிக்கும் என்றால் நேட்டோ நாடுகளின் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல் முன்னெடுப்போம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

நேச நாடுகளின் அணு ஆயுதங்களை தங்கள் நாட்டில் நிலை நிறுத்தலாம் என்று போலந்து அறிவித்த நிலையிலேயே ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது. போலந்தின் இந்த முடிவு ரஷ்யாவை கொந்தளிக்க வைத்துள்ளதாகவே கூறப்படுகிறது.

ரஷ்ய எல்லையில் நேட்டோ நாடுகளின் அணு ஆயுத குவிப்பு என்பது பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கப்படும் என்று ரஷ்ய வெளிவிவகார துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா அணு ஆயுதங்களை பெலாரஸ் நாட்டில் நகர்த்திய நிலையிலேயே போலந்து தங்கள் நாட்டில் நேச நாடுகளின் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மட்டுமின்றி, அமெரிக்காவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தையை போலந்து துவங்கியுள்ளது என்றும் அந்த நாட்டின் ஜனாதிபதி Andrzej Duda வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

போலந்து ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து, உடனடியாக ரஷ்யா எதிர்வினையாற்றியுள்ளது. ஆனால் போலந்துக்கு ஆணு ஆயுதங்களை நகர்த்துவோம் என நேட்டோ இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்