Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேற காத்து இருக்கும் முதியவர்கள்- காரணம் என்ன..?

சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேற காத்து இருக்கும் முதியவர்கள்- காரணம் என்ன..?

24 சித்திரை 2024 புதன் 06:49 | பார்வைகள் : 1214


சுவிட்சர்லாந்தில் இருந்து  வெளியேறிவரும்  முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேறி, வேறு நாடுகளில் தங்கள் இறுதிக்காலத்தை செலவிட முதியவர்கள் திட்டமிட்டுவருவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு திட்டமிடும் வரும் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகளின்படி, சுவிஸ் குடிமக்களில் 65 வயதுக்கு மேற்பட்ட சுமார் 195,000 பேர் வெளிநாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில், அந்த எண்ணிக்கை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது

குறிப்பாக, தாய்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தங்கள் இறுதிக்காலத்தை செலவிடச் செல்கிறார்கள் அவர்கள்.

அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மருத்துவச் செலவுகள்.

வெளிநாடுகளில் வீடுகள் விலை குறைவாக கிடைப்பதாலும், மருத்துவக் காப்பீடு கட்டணம் குறைவாக உள்ளதாலும், தங்களுக்கு அன்றாட உதவிகள் செய்வதற்காக ஆட்கள் தேவை என்றால், அதற்கான செலவும் சுவிட்சர்லாந்தைவிட இந்த நாடுகளில் குறைவாக இருப்பதாலும், அவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறிவருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்