Paristamil Navigation Paristamil advert login

அதிர்ச்சி தோல்வி குறித்து பேசிய CSK அணி தலைவர் ருதுராஜ்

 அதிர்ச்சி தோல்வி குறித்து பேசிய CSK அணி தலைவர் ருதுராஜ்

2 வைகாசி 2024 வியாழன் 09:44 | பார்வைகள் : 221


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம் அளித்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய சென்னை அணி 162 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பின்னர் தோல்வி குறித்து பேசிய CSK அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட், ''ஒருவேளை 50-60 ஓட்டங்கள் குறைவாக இருக்கலாம். நாங்கள் துடுப்பாட்டம் செய்யும்போது ஆடுகளம் சிறப்பாக இல்லை, பின்னர் அது சிறப்பாக இருந்தது. Impact விதியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நான் நாணய சுழற்சிகளை பயிற்சி செய்துள்ளேன், அது போட்டியில் சரியாக நடக்கவில்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை.

உண்மையைக் கூறவேண்டும் என்றால், நான் ஆடுகளத்திற்கு (நாணய சுழற்சிக்கு) செல்லும்போது அழுத்தத்தில் இருக்கிறேன். கடந்த போட்டியில் ஆடுகள தன்மையை கருத்தில்கொண்டு, நாங்கள் பாரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆச்சரியமாக இருந்தது.

சாஹர் முதல் ஓவரிலேயே வெளியேறியது பிரச்சனையாக இருந்தது. விக்கெட்டுகளை பெற வேண்டிய கட்டாயத்தில் 2 பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர். அத்துடன் பனி சுழற்பந்துவீச்சாளர்களை வெளியேற்றியது. இது கடினமாக இருந்தது. ஆனால் இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன. நாங்கள் முயற்சி செய்து வெற்றிப் பாதைக்கு வருவோம்'' என்றார்.   

வர்த்தக‌ விளம்பரங்கள்