Paristamil Navigation Paristamil advert login

6900 ஆண்டுகளுக்கு முன்பு விண்கல்லால் ஏற்பட்ட பள்ளம்: புகைப்படம் எடுத்த நாசா

6900 ஆண்டுகளுக்கு முன்பு விண்கல்லால் ஏற்பட்ட பள்ளம்: புகைப்படம் எடுத்த நாசா

1 வைகாசி 2024 புதன் 07:09 | பார்வைகள் : 240


இந்திய மாநிலமான குஜராத்தில் விண்கல்லால் ஏற்பட்ட பள்ளத்தை நாசா (NASA) புகைப்படம் எடுத்துள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள லூனா பள்ளத்தின் படத்தை நாசா புவி ஆய்வு மையத்தின் லேண்ட்சாட் 8 செயற்கைக்கோள் பதிவு செய்தது.

குஜராத்தில் உள்ள பன்னி புல்வெளி காப்புக் காடுகள் பகுதியில் உள்ள பள்ளத்தை நாசாவின் செயற்கைக் கோள் படமெடுத்துள்ளது. இந்த பள்ளம் ஏற்பட்டுள்ள கிராமத்தின் பெயரை சேர்ந்து 'லூனா பள்ளம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .

விண்கல் மோதியதால் இந்த பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

அண்மையில் நடத்தப்பட்ட புவி வேதியியல் பகுப்பாய்வுகளின் படி, விண்கல் மோதியதால் இந்த பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் யூகித்துள்ளனர்.

தோராயமாக இந்த பள்ளமானது 1.8 கிலோமீட்டர் விட்டத்துடன், 20 அடி ஆழத்துடன் அகமதாபாத்தில் இருந்து 320 கி.மீ தொலைவில் உள்ளது.

குஜராத்தின் வெள்ளை உப்பு பாலைவனம் என்று அழைக்கப்படும் கட்ச் பாலைவனம் அருகே இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது தாழ்தள பகுதியில் இருப்பதால் பள்ளத்தில் நீர் உள்ளது.

கடந்த 2022 -ம் ஆண்டு வறட்சி காலத்தில் இப்பள்ளத்தை சோதனை செய்ததில் இரிடியம் போன்ற தனிமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வெப்பம் மற்றும் அழுத்தத்தால் இப்பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதோடு, 6900 ஆண்டுகளுக்கு முன்பு இந்த லூனா பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியாக விண்கல் மோதியதால் உருவாகும் பள்ளங்கள் உலகம் முழுவதிலும் 200 -க்கும் குறைவாகவே உள்ளன.    

வர்த்தக‌ விளம்பரங்கள்