Paristamil Navigation Paristamil advert login

சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவா?

சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவா?

25 சித்திரை 2024 வியாழன் 06:48 | பார்வைகள் : 314


சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் ஒரு இளம் தமிழ் நடிகர் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் சுதா கொங்கரா தற்போது ’சூரரை போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுதா கொங்கரா அடுத்ததாக ’புறநானூறு’ திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த படம் கால தாமதமாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் தமிழ் சினிமாவின் இளம் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் சுதா கொங்கரா - துருவ் விக்ரம் படம் இன்னும் உறுதி செய்யப்படாததால் அவர் அடுத்ததாக எந்த படத்தை இயக்குவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்