Paristamil Navigation Paristamil advert login

கோடைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது ஆபத்தானதா?

கோடைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது ஆபத்தானதா?

24 சித்திரை 2024 புதன் 11:52 | பார்வைகள் : 445


கோடைக்காலத்தில் பலரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஏசியை நாடுகின்றனர், ஆனால் தொடர்ந்து ஏசியை பயன்படுத்துவதில் ஆபத்தும் உள்ளனக கூறுகின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வருகிறது. ஃபேன் காற்றே அனல் காற்றாக வீசும் நிலையில் பலரும் வீடுகளில் ஏசியை பயன்படுத்தவே விரும்புகின்றனர். ஆனால் அதிகமாக ஏசியை பயன்படுத்துவதில் சில உடல்நல பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பலரும் கோடைக்காலத்திற்கு முன்பு வரை ஏசியை பயன்படுத்தாமல் இருந்திருப்பார்கள். அதை சுத்தம் செய்யாமல் அப்படியே உபயோகம் செய்யும்போது அதில் தங்கியுள்ள தூசுக்கள், பாக்டீரியாக்கள் அறை முழுவதும் பரவும் ஆபத்து உள்ளது. இதனால் மூச்சு திணறல் மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.

பலரும் இரவு நேரங்களில் தூங்குகையில் ஏசியை ஆன் செய்துவிட்டு, ஏசி காற்று வெளியே செல்லக்கூடாது என்று அறையை முழுவதுமாக மூடிவிட்டு உறங்குவார்கள். அவ்வாறு செய்யும்போது அறைக்காற்று வெளியே செல்ல முடியாததால் ஆக்ஸிஜன் லெவல் குறைந்து சிலருக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்படலாம்.

சிலர் வெயிலில் நன்றாக அலைந்து வேர்வையோடு வீட்டிற்கு வந்து உடனே ஏ சி போடுவார்கள். அவ்வாறு செய்யும்போது வியர்வையோடு , குளிரும் சேர்வதால் சளி, இறுமல், தொண்டை கரகரப்பு ஏற்படலாம். எனவே ஏசியை அதிகமாக பயன்படுத்தாமல் தேவைக்கேற்ப பயன்படுத்துவதுடன், அடிக்கடி அதை சுத்தம் செய்து கொள்வதும் அவசியம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்