Paristamil Navigation Paristamil advert login

▶ Orly மற்றும் Roissy-Charles de Gaulle உட்பட நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

▶ Orly மற்றும் Roissy-Charles de Gaulle  உட்பட நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

24 சித்திரை 2024 புதன் 07:00 | பார்வைகள் : 2742


Orly விமான நிலையத்தில் 75% சதவீத விமானங்களும், Roissy-Charles de Gaulle விமான நிலையத்தில் 65% சதவீத விமானங்களும் இரத்துச் செய்யப்பட உள்ளன.

ஏப்ரல் 25 ஆம் திகதி நாளை வியாழக்கிழமை இடம்பெற உள்ள  விமான போக்குவரத்த்ய் கட்டுப்பாட்டாளர்களின் வேலை நிறுத்தத்தை அடுத்தே இந்த விமான சேவைகள் இரத்துக்குள்ளாகின்றன. நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் 60% சதவீதமான விமானங்கள் இரத்துச் செய்யப்படுவதாகவும், ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் 75% சதவீத விமானங்களும், சாள்-து-கோல் விமான நிலையத்தில் 65% சதவீத விமானங்களும் இரத்துச் செய்யப்படுவதாக direction générale de l’aviation civile (DGAC) அறிவித்துள்ளது.

நீஸ் (Nice) நகரிலும் 70% சதவீத விமானங்கள் இரத்துச் செய்யப்பட உள்ளன.

அதேவேளை, இயக்கப்படும் விமானங்களும் பாரிய தாமதங்களைச் சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்